Headlines| சூடுபிடித்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை to ’கோழைகள்’ என நேட்டோ நாடுகளை சாடிய ட்ரம்ப்!
ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து... அனைத்து நிலைகளிலும் சிறுபான்மைச் சகோதரர்களுக்கான சமூகநீதியை திமுக அரசு நிலைநாட்டி இருப்பதாக பெருமிதம்...
இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி... நபிகள் நாயகம் போதித்த அன்பு, கருணையை பின்பற்றி, உலகில் அமைதி தழைக்க அனைவரும் உறுதியேற்போம் என வாழ்த்து...
ரமலான் பண்டிகையை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் ஷாப்பிங் செய்ய நள்ளிரவில் குவிந்த மக்கள்... இறுதி நேரப் புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்க திரண்டதால் விழாக்கோலம் பூண்ட கடைவீதி...
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் களைகட்டிய கால்நடை விற்பனை.. சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் 6 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்...
இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்.... ஆயிரக்கணக்கானோர் திரண்டு தொழுகை....
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், போர் அச்சத்துக்கு மத்தியில் ரம்ஜான் கொண்டாட்டம்... அமைதிக்காக தொழுகையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள்...
கத்தாரில் முக்கிய எரிசக்தி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் ஈரான்... எரிவாயுக்காக கத்தாரை நம்பியுள்ள இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்...
ஈரான் போரால், சர்வதேச சந்தையில் 120 டாலரைத் தாண்டியது, ஒரு பேரல் கச்சா எண்ணெய்... 180 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாக சவுதி அரேபியா எச்சரிக்கை...
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து மேலும் ஒரு அதிர்ச்சி... லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்தது ப்ரீமியம் பெட்ரோல் விலை....
தொழில்துறை எரிபொருள் விலையும் திடீர் உயர்வு.... லிட்டருக்கு சுமார் 22 ரூபாய் அதிகரித்து 109 ரூபாயைக் கடந்தது....
ப்ரீமியம் பெட்ரோலுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது... வழக்கமான எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்...
எரிபொருள் விலை உயர்வால் சொமேட்டோ உணவு விநியோக நிறுவனத்தின் கட்டணம் அதிகரிப்பு... பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 2 ரூபாய் 40 காசுகள் உயர்த்தி அறிவிப்பு...
சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னை புறநகர் பகுதிகளில், P.G. விடுதிகளில் வசிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் கடும் பாதிப்பு... சாலையோர உணவகங்கள் மூடப்பட்டதால், சாப்பாட்டுக்காக அதிக செலவு செய்யும் நிலைமை....
எரிவாயு தட்டுப்பாட்டால், குஜராத்தில் ஜவுளி, சாயம் பூச்சு தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை... வேலையிழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ரயில்களில் சொந்த ஊர்களுக்கு பயணம்...
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை... உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு விளக்கம்...
அமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி படுகொலை... 3 வார கால போரில் ஈரானின் முக்கிய அதிகாரிகள் படுகொலை...
ஈரான் உடனான போரில் அமெரிக்காவுக்கு உதவ முன்வராத நேட்டோ நாடுகள் கோழைகள்... அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ ஒரு "காகிதப் புலி” எனவும் அதிபர் ட்ரம்ப் சாடல்...
அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுப்பு... அழுத்தங்களுக்குப் பணியமாட்டோம் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க உறுதி
ஈராக்கில் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் எண்ணெய் வயல்களில் உற்பத்திநிறுத்தம்... ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்துமுடங்கி உள்ளதால் ஈராக் அரசுநடவடிக்கை...
தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு 6 ஆயிரத்து 560 ரூபாய் குறைந்த நிலையில் 400 ரூபாய் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 11ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை..
வெள்ளி விலை கிலோவுக்கு 5ஆயிரம் ரூபாய் சரிவு... சென்னையில் கடந்த 3 நாட்களில் வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கு விற்பனை..
சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்... 4ஆவது நாளாக நேர்காணல் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ..
தமிழகத்தில் அதிமுகதான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.. தொகுதிப் பங்கீடு 4 நாட்களில் முடிந்துவிடும் எனவும் பதில்..
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இனி புதிய கட்சிகள் வரும் சூழல் இல்லை என அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி பேட்டி.. விஜய்யின் தவெகவுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என மீண்டும் மறுப்பு...
டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்கும் டிடிவி.தினகரன் மற்றும் அன்புமணி... தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்...
தேர்தல் களத்தைச் சந்திக்கவே டெல்லியின் சம்மதம் வேண்டுமென்ற நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி... எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்....
டெல்லிக்கு கே.பழனிசாமி ஓடுவதற்குப் பெயர்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவதா?... வடிவேலு, கஞ்சா கருப்பு காமெடிகளை சுட்டிக்காட்டி அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை...
2011 தேர்தலுக்காக டெல்லியில் கருணாநிதி தவமாய் காத்திருக்கவில்லையா என அதிமுக கேள்வி... கே.பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு விமர்சித்த நிலையில் பதிலடி..
தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் அதிமுக இணைந்துவிடும் என செல்வப்பெருந்தகை பேட்டி... தமிழ்நாட்டு மக்கள் அதிமுக - பாஜகவைபுறக்கணிப்பார்கள் என்றும் நம்பிக்கை...
திமுக கூட்டணியில் 10 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் பெற விசிக விருப்பம்... இரட்டை இலக்கத்திலேயே போட்டியிட வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் திருமாவளவனிடம் வலியுறுத்தியதாக தகவல்...
மக்கள் நீதி மய்யம் தனி சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கமல்ஹாசனிடம் வலியுறுத்திய நிர்வாகிகள்... செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பிறகு பொதுச்செயலர் அருணாசலம் பேட்டி...
சட்டமன்றத் தேர்தலையொட்டி தவெக 2ஆம் கட்ட வேட்பாளர் நேர்காணல்.... விருப்ப மனு அளித்தோரிடம் நேர்காணல் நடத்தினார் தவெக தலைவர் விஜய்....
விஜய்யின் ஜனநாயகன் படத்தை முடக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.... முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி....
கையெழுத்தானது ராமதாஸ் - சசிகலா இடையேயான கூட்டணி ஒப்பந்தம்... தமிழ்நாடு, புதுச்சேரியில் இணைந்து போட்டியிடப்போவதாக கூட்டாக அறிவிப்பு....
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது... 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிப்பு....
புதுச்சேரியில் 10 தொகுதிகளில் களம் காண்கிறது பாஜக... அதிமுக மற்றும் சார்லஸ் மார்ட்டினின்எல்ஜேகேவுக்கு தலா 2 தொகுதிகள்ஒதுக்கீடு....
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டி... மங்களம், தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்...
கூட்டணியில் குழப்பம் நீடிக்கும் நிலையில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா வேட்புமனு தாக்கல்... ‘வருங்கால முதல்வர்’ என ஆதரவாளர்கள் முழக்கம்...
புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸே தலைமை என்பதில் எந்த மாற்றமும் இல்லை என சோடங்கர் உறுதி... திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் பேட்டி...
வேலூரில் மேயர் பயணம் செய்த காரை பறிமுதல் செய்த காவல் துறையினர்... தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியும் நிறுத்தாமல் சென்றதால் நடவடிக்கை; ஓட்டுநர் உட்பட 3 பேர் மீது வழக்கு...

