headlines for the morning of december 30th 2025
திருப்பதி, புடின்எக்ஸ் தளம்

HEADLINES | சொர்க்கவாசல் திறப்பு முதல் புடின் வீட்டை நோக்கி ட்ரோன் தாக்குதல் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது சொர்க்கவாசல் திறப்பு முதல் புடின் வீட்டை நோக்கி ட்ரோன் தாக்குதல் வரை விவரிக்கிறது.
Published on
Summary

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது சொர்க்கவாசல் திறப்பு முதல் புடின் வீட்டை நோக்கி ட்ரோன் தாக்குதல் வரை விவரிக்கிறது.

  • வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்.... நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

  • மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு.... ஜனவரி 14இல் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனம்..

  • மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்... ஜனவரி 4 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

  • கடுமையான பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள வட மாநிலங்கள்... மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் ஐடிஐ படிக்கும் மாணவர்களையும் சேர்க்க முடிவு... ஜனவரி 5இல் திட்டம் தொடக்கம்

headlines for the morning of december 30th 2025
கரூர்புதிய தலைமுறை
  • கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக நிர்வாகிகளிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை...

  • தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பம்...

  • சென்னையில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ்... 15 கோரிக்கைகளை ஏற்றது தமிழக அரசு

  • திருத்தணியில் வடமாநில நபர் தாக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள்...

  • ரஷ்ய அதிபர் புடின் வீட்டை நோக்கி, 91 ட்ரோன்களை கொண்டு தாக்குதல்... உக்ரைனின் முயற்சி நடுவானில் முறியடிக்கப்பட்டதாக ரஷ்யா தகவல்...

headlines for the morning of december 30th 2025
ஒரே காரில் பயணித்த மோடி - புதின்.. Fortuner car-ஐ தேர்ந்தெடுத்தது ஏன்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com