டிசம்பர் 28ஆம் தேதி காலை தலைப்புச் செய்திகள்
டிசம்பர் 28ஆம் தேதி காலை தலைப்புச் செய்திகள்web

HEADLINES| தேர்தலில் அணியாகதான் வருவோம் என விஜய் பேச்சு To U19 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு!

புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தேர்தலில் அணியாகதான் வருவோம் என விஜய் பேசியது முதல் U19 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு வரை விவரிக்கிறது.
Published on

திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்... 314 முடிவுற்ற பணிகளைதொடங்கிவைத்து 46 புதிய பணிகளுக்கு அடிக்கல்..

வாக்களிக்காத மக்களிடம் இருந்தும் திமுக அரசு நல்ல பெயரை பெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்... மத்திய பாஜக அரசு அப்படியே தலைகீழாக உள்ளதாக விமர்சனம்...

விவசாயி வேடம் போட்டு சிலர் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவர் என முதல்வர் விமர்சனம்... வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் பேச்சு...

அதிமுக ஆட்சி பற்றி என்ன கேட்டாலும் பதில் சொல்லத் தயார் என கே. பழனிசாமி திட்டவட்டம்... தாம் ஏற்கனவே விடுத்த ஓபன் சேலஞ்ச் இன்னும் நிலுவையில்தான் உள்ளது என்றும் பதில்...

நிறைவேற்றிய வாக்குறுதி பட்டியலை வாசிக்கத் தயாரா? முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி...

சட்டப்பேரவையில் முதல்வர் கேள்விக்கு பதில் சொல்லாமல் புறமுதுகு காட்டி ஓடியவர் பழனிசாமி... ஓபன் சேலஞ்ச் என பீலா தேவையா என்று அமைச்சர் ரகுபதி கேள்வி...

eps, mk stalin
eps, mk stalinpt web

தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான அலை வீசுவதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சனம்... ஊழல் அமைச்சர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி...

எண்ணிக்கையில் சிறுபான்மை சமூகங்களை புறக்கணிக்கும் திராவிடக் கட்சிகள்... குயவர்கள், வண்ணார்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதில்லை என சீமான் குற்றச்சாட்டு...

வரும் தேர்தல் திராவிட சித்தாந்தத்திற்கும் தமிழ் தேசிய கருத்தியலுக்குமான போர்... நாதக பொதுக்குழு கூட்டத்தில் சீமான் பேச்சு...

பிப்ரவரி 21ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பேன்... நாதக வேட்பாளர் பட்டியல் ஆச்சரியப்பட வைக்கும் என சீமான் பேச்சு...

சீமானும், விஜயும் சனாதன சக்திகளுக்கு துணை போகின்றனர்... விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீண்டும் விமர்சனம்...

மலேசியாவில் விஜயின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா கோலாகலம்... பெரும் ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் ரேம்ப் வாக் செய்த விஜய்...

vijay
vijaypt web

எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக, சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்... ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உருக்கம்...

வருவோர், போவோரையெல்லாம் எதிர்க்க முடியாது என விஜய் திட்டவட்டம்... 33 ஆண்டுகளாக அணியாகத்தானே வந்தோம் என்றும் அரசியல் பேச்சு...

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிப்பு... கட்சி தலைமை அலுவலகம் பகுதியில் பாதுகாப்பு...

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்... பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்று இடத்தில் ஆர்ப்பாட்டம்...

சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது... திருவிக நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா...

வரலாற்றிலேயே இல்லாத அளவாக புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை... ஒரே நாளில் கிலோவுக்கு 31 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை...

vijayakanth memorial day
vijayakanthpt

ஆபரண தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ஆயிரத்து 680 ரூபாய் உயர்வு... ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து நான்காயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை..

தன்னை உருது அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொல்பவர்கள் தமிழ்நாட்டு முதல்வரிடம் அப்படி கேட்க முடியுமா? மாநில மொழிக்கு மதிப்பு தருவது அவசியம் என்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கருத்து...

மகாத்மா காந்தி பெயரிலான கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க நாடு தழுவிய பரப்புரை தேவை... காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு...

தைவானில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்... பல நகரங்களில் நில அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டதால் மக்கள் அச்சம்...

உக்ரைன் மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்... நிலவறைகளில் தஞ்சமடைந்த மக்கள்... ட்ரம்ப் ஜெலன்ஸ்கி இன்று சந்திக்கும் நிலையில் கவனம் பெறும் தாக்குதல்...

தங்கம்
தங்கம்web

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட கடும் பனிப்புயல்... 2,100 சர்வதேச விமானங்கள் ரத்து...

மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு; 19 பேர் படுகாயம்... அடர் மூடுபனி காரணமாக விபத்து என அதிகாரிகள் தகவல் ..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி... 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்று அபாரம்...

யு19 உலகக்கோப்பை அணிக்கான இந்திய அணி ஆயுஸ் மாத்ரே தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.. உலகக்கோப்பை ஜனவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com