headlines for the morning of december 23th 2025
ஹுமாயூன் கபீர், பியூஷ் கோயல்எக்ஸ் தளம்

HEADLINES | பியூஷ் கோயலின் வருகை முதல் புதுக்கட்சி தொடங்கிய ஹுமாயூன் கபீர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தமிழகம் வரும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் முதல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹுமாயூன் கபீர் தொடங்கிய புதுக்கட்சி வரை விவரிக்கிறது.
Published on
Summary

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தமிழகம் வரும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் முதல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹுமாயூன் கபீர் தொடங்கிய புதுக்கட்சி வரை விவரிக்கிறது.

  • இன்று தமிழ்நாடு வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்... அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திட்டம்...

  • அமைச்சர்கள் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி... ஜனவரி 6ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு...

  • மீண்டும் ஒரு லட்சம் ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியது ஆபரணத் தங்கத்தின் விலை... ஒரே நாளில் ஆயிரத்து 360 உயர்ந்து 1 லட்சத்து 560 ரூபாயாக விற்பனை..

  • குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... 24, 25ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என கணிப்பு...

  • தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்... 418 என்ற மிக மோசமான அளவை எட்டியதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்...

headlines for the morning of december 23th 2025
delhix page
  • இந்தியா, நியூஸிலாந்து இடையிலான வரியற்ற வர்த்தக ஒப்பந்தப்பேச்சு நிறைவு... விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்...

  • திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹுமாயூன் கபீர் புதிய கட்சி தொடங்கினார்... மம்தா பானர்ஜி ஆதரவு வாக்குகளை பிரிப்பார் என எதிர்பார்ப்பு

  • விஜயின் கடைசிப் படமான ஜனநாயகனுடன் மோதும் சிவகார்த்திகேயனின் பராசக்தி... ஜனவரி 14ஆம் தேதி ரிலீசாகவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 10ஆம் தேதியே வெளியாகிறது.

  • புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

  • மதுரை திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 20 நாட்களுக்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

headlines for the morning of december 23th 2025
திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம் | மதுரை நீதிமன்றத்தில் பரபர வாதம்.. முழு தொகுப்பு.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com