HEADLINES | டெல்லியில் மீண்டும் மோசமாகும் காற்றின் தரம் முதல் கில் நீக்கம் குறித்து பேசிய SKY வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, டெல்லியில் மீண்டும் மோசமான காற்றின் தரம் முதல் இந்திய உலக்க்கோப்பை அணியிலிருந்து கில் நீக்கம் குறித்து விளக்கம் அளித்த சூர்யகுமார் யாதவ் வரை விவரிக்கிறது.
தமிழகத்தில் 24ஆம் தேதி வரை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
நீலகிரி மாவட்டத்துக்கு உறைபனி எச்சரிக்கை... அதிகாலை வேளையில் உறைபனி நிலவும் என கணிப்பு...
கொடைக்கானல் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் கண்களை கவர்ந்த மேகக்கூட்டங்கள்... சுற்றுலாப் பயணிகள் பரவசம்...
டெல்லியில் நிலவும் கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... நேற்று ஒரே நாளில்129க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து...
டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு... காற்று தரக் குறியீடு தீவிரமான நிலைக்கு சென்றதால் மக்கள் பாதிப்பு...
அசாம் மாநில முன்னாள் முதல்வர் கோபிநாத் பர்தோலாயின் சிலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி... கவுகாத்தி விமான நிலையத்தின் புதிய முனையமும் திறப்பு...
ஊடுருவல்காரர்களை தடுக்கவே நாடு முழுவதும் எஸ்ஐஆர் நடவடிக்கை... அசாமில் நடைபெற்றபொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு...
100 நாள் வேலைத்திட்டத்தில் மத்திய அரசு செய்த மாற்றங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம்... உழைக்கும் மக்கள் மீது புல்டோசர் தாக்குதல் என குற்றஞ்சாட்டி வீடியோ வெளியீடு...
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா...கேக் வெட்டி கிறிஸ்துமஸைகொண்டாடினார் ஆளுநர் ஆர்.என்.ரவி...
நெல்லையில் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... 62 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்...
தமிழர் தொன்மையை ஜென் ஸி தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க நடவடிக்கை... பொருநை அருங்காட்சியகம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு...
சிறுபான்மையினர் நலம் காக்க திராவிட மாடல் அரசு துணை நிற்கும்... சிறுபான்மையினரும் திமுகவுக்கு துணை நிற்க வேண்டுமென கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்...
தமிழ்நாட்டின் ஒற்றுமையையும், அமைதியையும் சிலர் சீர்குலைக்க நினைக்கிறார்கள்... மதத்தின் பெயரால் உங்களை ஒருவர் தூண்டினால் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் முதல்வர் பேச்சு...
கிறிஸ்துமஸ் விழாவில் பாஜகவுக்கு எதிராக விஷத்தைக் கக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்... ஒரு முதல்வர் இதைவிட மதவேறுபாடோடு பேச முடியாது எனவும் தமிழிசை சவுந்திரராஜன் குற்றச்சாட்டு...
ராமநாதபுரம் அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியிலிருந்து நீக்கினார் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி... திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதாக தகவல்...
சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு முகாம்... வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்...
புதுச்சேரியில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபீனுக்கு உற்சாக வரவேற்பு... தென் மாநிலங்களில் பாஜக வளர்ந்து வருவதாக புதிய தலைமுறைக்கு பேட்டி...
புதுச்சேரியில் பாஜக செயல் தலைவர் நிதின் நபீனை வரவேற்றபோதுகுளறுபடி... சாலையில் இறங்கி நடந்துசென்றமத்திய அமைச்சர் மண்சுக்மாண்டவியா...
நாகூர் ஹனிபாவின் காலடிச் சுவடிகள் இருக்கும் வரை தமிழ்நாடு ஒருபோதும் இந்தி திணிப்பை அனுமதிக்காது... நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...
தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக தவெக தலைவர்விஜய் ஆலோசனை...செங்கோட்டையன் உள்ளிட்டநிர்வாகிகள் பங்கேற்பு...
தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் இந்திய காப்புரிமை பதிவுகளில் 23 சதவீத வளர்ச்சி கண்டு தமிழ்நாடு புதிய சாதனை... நாட்டின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக அரசு பெருமிதம்...
பணி நிரந்தரம் கோரி தொடரும் செவிலியர்கள் போராட்டம்... மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்...
ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை கொண்டு வந்ததே அதிமுகதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு... காலி பணியிடங்களே இல்லாத நிலை தற்போது உள்ளதாக விளக்கம்...
30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் போலி விளம்பரம்... லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் எனபுதுக்கோட்டை மாவட்ட காவல் துறைஎச்சரிக்கை...
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 99 ஆயிரத்து 200க்கு விற்பனை... ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் உயர்ந்து 226 ரூபாய்க்கு விற்பனை...
மீண்டும் புதிய உச்சம் தொட்டது முட்டை கொள்முதல் விலை... 5 காசுகள் உயர்ந்தது 6 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயம்...
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் குவிந்துள்ள அலங்கார பொருட்கள்... கண்களை பறிக்கும் எல்.இ.டி நட்சத்திரங்கள்...
வங்கதேச மாணவர் போராட்ட தலைவர் உஸ்மான் ஹாதியின் இறுதிச்சடங்கில் வன்முறை... நாடாளுமன்றத்திற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயற்சி செய்வதால் பதற்றம்...
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்... இஸ்ரோவின் பாராசூட் சோதனை வெற்றி...
கருவூலத்தில் இருந்த பரிசுப் பொருட்களை விற்றது தொடர்பான ஊழல் வழக்கு... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்...
டி20 கிரிக்கெட் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு... சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் துணை கேப்டன் சுப்மன் கில்லுக்கு இடமில்லை...
சுப்மன் கில் நீக்கம் குறித்து பேசியிருக்கும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், கில்லின் தரம் என்ன என்பது எங்களுக்கு தெரியும், இந்த முடிவு அவரின் ஃபார்ம் சார்ந்து எடுக்கப்பட்டது அல்ல், அணியில் சரியான காம்பினேஷன் இருக்கவேண்டும் என முடிவுசெய்து எடுக்கப்பட்டது என பேசியுள்ளார்.
அஜித் அகர்கர் பேசுகையில், 15 பேர் கொண்ட அணியை தேர்வுசெய்யும்போது அணியின் காம்பினேசனுக்காக சில வீரர்களால் இடம்பெற முடியவில்லை. கில், ஜிதேஷ் சர்மா இருவரும் தவறாக எதுவும் செய்யவில்லை என பேசியுள்ளார்.

