HEADLINES | ஈரோடு விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முதல் ரத்தான கிரிக்கெட் வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஈரோடு விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முதல் ரத்தான கிரிக்கெட் வரை விவரிக்கிறது.
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்... நாளை முதல் 21ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் லேசான பனிமூட்டம் காணப்படும்
டெல்லியில் தனியார், அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு... காற்று மாசு அதிகரித்துவரும் நிலையில், விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
இந்தியா- ஓமன் இடையே நடைமுறைக்கு வரும் தடையற்ற வர்த்தகம்... அரசுமுறைப் பயணமாக ஓமன் சென்றுள்ள பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தாகிறது ஒப்பந்தம்...
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மாறுதல்கள் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு... மத்திய அரசு ஆலோசனை
அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா... மக்களவையில் நீண்ட விவாதத்துக்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்...
காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல்...
அன்புமணி மீதான ஊழல் வழக்கில் சிபிஐ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்... பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்...
ஈரோட்டில் இன்று நடைபெறுகிறது விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.... குடிநீர், கழிவறை, வாகனம் நிறுத்துமிடம், மருத்துவ வசதிகள் ஏற்பாடு....
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கில் அரசு அதிகாரிகள் மீது நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அதிருப்தி....
லக்னோவில் நச்சுப்புகை மற்றும் கடும் பனிமூட்டத்தால், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 4ஆவது டி20 போட்டி ரத்து...

