headlines for the morning of december 17th 2025
bill, ind vs sax page

HEADLINES | தாக்கல் செய்யப்பட்ட மசோதா முதல் IND - SA கிரிக்கெட் மேட்ச் வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, தாக்கல் செய்யப்பட்ட ஊரக வேலைவாய்ப்பு மசோதா முதல் IND - SA கிரிக்கெட் மேட்ச் வரை விவரிக்கிறது.
Published on
Summary

இன்றைய தலைப்புச் செய்தியானது, தாக்கல் செய்யப்பட்ட ஊரக வேலைவாய்ப்பு மசோதா முதல் IND - SA கிரிக்கெட் மேட்ச் வரை விவரிக்கிறது.

  • உலகத் தலைவர்களில் முதன்முறையாக பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கௌரவம்.. 140 கோடி இந்தியர்களுக்கு விருதை அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி....

  • கிராமப்புற வேலைவாய்ப்புக்கான புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல்... வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய இலக்கிற்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக விளக்கம்...

  • காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதா மீது மக்களவையில் விவாதம்... தொடக்க நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்....

  • மேற்குவங்கம், ராஜஸ்தான், புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு... ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கானவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் அதிர்ச்சி...

  • திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க தடையில்லை... வழக்கு விசாரணை இன்றும் தொடரும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அறிவிப்பு.

headlines for the morning of december 17th 2025
voter listx page
  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்... கடந்த 1 மாதத்தில் 26 லட்சத்து 81 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்...

  • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை வரை மிதமான மழை பெய்யக்கூடும்.... புதுச்சேரி, காரைக்காலில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

  • டெல்லியில் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது... காற்று மாசுவை கட்டுப்படுத்த, வாகனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த டெல்லி அரசு

  • ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய சஜித் அக்ரம், இந்தியாவைச் சேர்ந்தவர் என தகவல்... ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர் என தெலங்கானா போலீஸார் விளக்கம்...

  • இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே டி20 தொடரின் 4ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி இதில் வெற்றிபெற்றால், தொடரைக் கைப்பற்றும்.

headlines for the morning of december 17th 2025
IND Vs SA T20 | 3ஆவது போட்டியில் இந்தியா எளிதில் வெற்றி.. தொடரில் முன்னிலை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com