HEADLINES | மகளிர் உரிமைத் தொகை உயரும் என அப்டேட் To உலக சாதனை படைத்த சூர்யவன்ஷி!
மேலும் 16 லட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்... வரும் நாட்களில் மகளிர் உரிமைத் தொகை உயரும் என முதல்வர்ஸ்டாலின் பேச்சு...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்... இலவசம் என கொச்சைப்படுத்தியவர்கள் கூட தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தியுள்ளதாகவும் பேச்சு...
கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட மகளிர் நலத்திட்டங்களால் பெண்களின் செலவு மிச்சமாகியுள்ளது... தங்கள் பொருளாதார வலிமையை பெண்கள் உயர்த்தியுள்ளனர் என்றும் முதல்வர் பேச்சு...
தமிழ்நாட்டில் நடைபெறுவது பெண்களுக்கான ஆட்சி என உதயநிதி பேச்சு... அனைத்து நலத் திட்டங்களும் பெண்களை மனதில்வைத்தே தீட்டப்படுகிறது என்றும் கருத்து...
தேர்தலை மனதில் வைத்தே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்துகிறது திமுக அரசு... 30 லட்சம் பேருக்கு என அறிவித்துவிட்டு 17 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்குவதாகவும் அதிமுக குற்றச்சாட்டு...
காவிரியின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு மும்முரம்... 30 பேர் கொண்ட குழுவை அமைத்தது கர்நாடக அரசு...
மேகதாது அணை கட்ட குழு அமைக்கப்பட்டதற்கு எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்... திமுக ஆட்சியில் காவிரியில் தமிழக உரிமைகளை விட்டுக்கொடுப்பது வாடிக்கையாகிவிட்டதாக விமர்சனம்...
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசின் முயற்சியை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது... நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்...
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி பயணம்... தேர்தல் கூட்டணி தொடர்பாக அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசிக்க திட்டம்...
அமலாக்கத்துறை ஆதாரம் கொடுத்தும்கூட அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிய மறுக்கிறார்கள்... பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு...
ஈரோட்டில் வரும் 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு ஏற்பாடு... காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் நிகழ்ச்சி நடைபெறும் என தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேட்டி...
சென்னையில் ஒரே நாளில் முழு கொள்ளளவை எட்டிய 3 முக்கிய ஏரிகள்... ஒன்றரை ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை வராது என நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல்...
நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை புதிய உச்சம்... ஒரே நாளில் 5 காசுகள் உயர்ந்து 6 ரூபாய்15 காசுகளாக நிர்ணயம்...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை தொடர்பான வழக்கு... வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் விமர்சனம்... மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி...
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு 11 ஆயிரத்து 718 கோடி ரூபாய் ஒதுக்கீடு... பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில்ஒப்புதல்...
டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு... வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
டெல்லியில் காற்று மாசை தடுக்க விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும்... பிரச்சினையை தீர்க்க அனைவரும்ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு...
கேரளாவில் நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு... 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது எர்ணாகுளம் நீதிமன்றம்...
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடத்த அனுமதி... நகரின் நற்பெயருக்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேச்சு...
தாய்லாந்து, கம்போடியா இடையே மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து... இருநாட்டு பிரதமர்களுடன் கலந்துரையாடி, அமைதி முயற்சி கொண்டுவந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து...
ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க 40 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்... புடின் அண்மையில் இந்தியா வந்திருந்த நிலையில், உறவை மேம்படுத்தும் பாகிஸ்தான் முயற்சியில் பின்னடைவு...
ரஷ்ய தாக்குதலில் தாயை இழந்த உக்ரைன் சிறுவன்... 11 வயது குழந்தையின் குரலில் கண்கலங்கிய ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம்...
இந்தியா வந்தார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி... கொல்கத்தா விமான நிலையத்தில் கால்பந்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு...
மீண்டும் மல்யுத்த களத்திற்கு திரும்பும் வினேஷ் போகத்... அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிப்பு...
யு19 ஆசியக்கோப்பையில் 95 பந்தில் 171 ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்ஷி, 14 சிக்சர்கள் விளாசி உலகசாதனை படைத்தார். யூத் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிக சிக்சர்கள் இதுவாகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலியா வீரர் 2008-ல் 12 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
14 சிக்சர்களை விளாசிய சூர்யவன்ஷி ஒட்டுமொத்தமாக 57 சிக்சர்களை கடந்தார். இதன்மூலம் யு19 கிரிக்கெட்டில் 50 சிக்சர்களை கடந்த முதல் இந்திய வீரராக மாறி சாதனை படைத்தார். இதற்குமுன்பு 38 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

