Headlines| சிலிண்டர் வாங்க விதிகளை தளர்த்திய மத்திய அரசு to விஜய் பரப்புரை ரத்து?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை... வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி...
விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு... தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தகவல்...
வட தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பைவிட அதிகம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு... தென் தமிழ்நாடடில் வெப்பம் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் கணிப்பு..
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு... இறுதி நாளில் முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பதாக தகவல்...
சட்டமன்றத் தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் இதுவரை 650 கோடி ரூபாய் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்... தமிழ்நாட்டில் 170 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையம் தகவல்...
அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரையால் சூடுபிடிக்கும் தமிழகம்... டீ போட்டு கொடுத்தும், பூ கட்டியும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்கள்...
மதுரையை மணிப்பூராக மாற்றத் துடித்தது தேசிய ஜனநாயக கூட்டணி... கலவரத்தைத் தூண்ட நினைத்த பாஜகவின் சதியை மதுரை மக்கள் முறியடித்ததாக திருமங்கலம் பரப்புரைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு...
கடன் சுமை குறித்து புரிதலின்றி பேசுகிறார் பியூஷ் கோயல்... பாஜக ஆளும் மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டுக்குமான நிதி வேறுபாட்டைக் கூறத் தயாரா என மு.க. ஸ்டாலின் சவால்...
தமிழ்நாடு திவாலாகப் போகிறது என பியூஷ் கோயல் பேசியது TOO MUCH... தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் திவாலாகப் போகிறது என ஸ்டாலின் கடும் சாடல்...
5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியதே ஸ்டாலினின் சாதனை... முறைகேடாக சென்ற பணம் பெறப்பட்டு கஜானா நிரப்பப்படும் என நெய்வேலி பரப்புரைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
கச்சத்தீவு, முல்லப்பெரியாறு, மீத்தேன், நீட் என தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தது திமுக அரசுதான்... துரோகத்துக்கு இலக்கணமே ஸ்டாலினும், கருணாநிதியும்தான் என எடப்பாடி பழனிசாமி சாடல்...
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து விலகியதில் திமுகவின் அழுத்தம் இல்லை என திருமாவளவன் விளக்கம்... உதயநிதிக்கு எதிராக தான் வருவேன் என்று ஆதவ் அர்ஜுனா கூறியது ஆதாரமில்லாத, அதீத கற்பனை என்றும் பதில்...
ராணிப்பேட்டை தொகுதியில் வினோத் காந்திக்கு பதில் அவரது தந்தையும், அமைச்சருமான காந்தியே போட்டி என தகவல்... மகனை வேட்பாளராக அறிவித்ததால் அதிருப்தியில் இருந்த நிலையில் திமுக தலைமை முடிவு...
மதுரை மேலூரில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் போட்டியிடுவார் என பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு... ஏற்கெனவே 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலூருக்கும் அறிவிப்பு...
முன்னாள் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆசி பெற்றார் மத்திய அமைச்சர் எல்.முருகன்... அவிநாசியில் எல்.முருகன் போட்டியிட தனபாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் சந்திப்பு...
திமுகவுடன் தவெக தலைவர் விஜய் மறைமுக கூட்டணி... திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கவே விஜய் தேர்தல் களம் காண்பதாக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு...
சென்னை வில்லிவாக்கம், தி.நகரில் இன்று நடைபெற இருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் ரத்து எனத் தகவல்... காவல்துறை விதித்த நேர கட்டுப்பாடுகள் காரணம்...
கலைஞர் கருணாநிதி மற்றும் விஜயகாந்த் இடையேயான 50 ஆண்டுகால நட்பை நினைவுகூர்ந்த பிரேமலதா... இருவரையும் விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை என்றும் காட்டம்...
புதுச்சேரி கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியில் மட்டும் வாக்கு சேகரிப்போம் என திருமாவளவன் பேட்டி... விசிக வேட்புமனு தாக்கல் செய்து, திரும்பப்பெற முடியாத 3 தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பணியாற்றுவோம் என்றும் உறுதி...
ஆட்சியாளர்கள் என்ன கர்ணனின் பரம்பரையா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாள் சீமான் கேள்வி... யாருடைய காசை எடுத்து 2000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தருவதாக சொல்கிறீர்கள் என்றும் கேள்வி...
5 கிலோ எடையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெறுவதற்கு இருப்பிட ஆவணம் அவசியமில்லை... புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்களுக்காக கட்டுப்பாட்டை தளர்த்தியது மத்திய அரசு...
மேற்குவங்கத்தில் சட்டம்-ஒழுங்கிற்கு திரிணாமூல் காங்கிரஸ் அரசு இறுதி சடங்கு செய்வதாக பிரதமர் மோடி விமர்சனம்... பாஜக வெற்றி பெறுவதன் மூலம் மாநிலத்தில் புதிய நம்பிக்கை பிறக்கும் எனவும் பேச்சு...
கேரளத்தை மாறி மாறி ஆட்சி செய்த இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸார் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை... ஊழலற்ற ஆட்சியை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியுமென உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு...
அசாமில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிலங்கள் அம்பானிக்கும் அதானிக்கும் தாரை வார்க்கப்படும்... தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி விமர்சனம்...
உலகளவில் நடந்து வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்... ஈஸ்டர் தின பிரார்த்தனையில் உலகத் தலைவர்களுக்கு போப் லியோ வலியுறுத்தல்...
ஹார்முஸ் நீரிணையை உடனே திறக்க ஈரானுக்கு வசைச் சொற்களால் காட்டமான எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்... வரும் 7ஆம் தேதி ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை தாக்குவோம் என்றும் அறிவிப்பு...
விமானியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு அமெரிக்க விமானம் மற்றும் 2 ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தினோம்... ஈரான் புரட்சிப்படை அதிரடி அறிவிப்பு...
ஹார்முஸ் நீரிணை திறப்பு விவகாரம் தொடர்பாக ஈரானுடன் ஓமன் அரசு முக்கிய பேச்சுவார்த்தை... கப்பல் போக்குவரத்தை இருநாடுகள் கூட்டாக நிர்வகிப்பது குறித்து விவாதம் என தகவல்...
லெபனானின் இஸ்ரேல் ராணுவம், ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையே கடும் மோதல்... இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஏராளமான கட்டங்கள், குடியிருப்புகள் சேதம்...
லிபியக் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து... ஈஸ்டர் வார இறுதியில் நடந்த துயரச் சம்பவத்தில் 70-க்கும் மேற்பட்டோர் மாயம் இருவர் உயிரிழப்பு...
ஐபிஎல் கிரிக்கெட்டில் விறுவிறுப்பான போட்டி... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி... ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி...

