HEADLINES| இந்தோனேசியாவில் மசூதியில் குண்டுவெடிப்பு முதல் சிஎஸ்கே-க்கு வரும் சஞ்சு சாம்சன் வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய காலை மற்றும் மாலை தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான மாலை தலைப்பு செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
இந்தோனேசியாவில் பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு.... 20 மாணவர்கள் உட்பட 54 பேர் காயம்...
பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளி தாக்கியதில் 180க்கும் அதிகமானோர் உயிரிழப்பு... 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு...
மெக்சிகோ அதிபர் கிளோடியா ஷெயின்போமிடம் பொது இடத்தில் பாலியல் அத்துமீறல்... மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது அதிர்ச்சி சம்பவம்...
வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம்... டெல்லியில் தபால் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி...
பொதுமக்களின் நிலங்களை பறித்து தொழிலதிபர்களிடம் கொடுக்கிறார் பிரதமர் மோடி... பிஹார் தேர்தல் பரப்புரையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம்...
கர்நாடகாவில் கரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்... விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை... வாகனங்கள் மீது கல்வீச்சு...
மஹாராஷ்டிராவில் சாயத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... ரசாயன பொருட்கள் தீயில் எரிந்ததால் விண்ணை முட்டிய புகைமூட்டம்...
திமுகவை அழிக்க சிலர் கனவு காண்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு... கட்சியை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என உறுதி..
பாஜகதான், தம்மை அழைத்து ஒருங்கிணைப்பு வேலையை செய்யச் சொன்னது... அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பேட்டி...
அதிமுக ஒன்றுபட வேண்டுமென்று மோடியும் அமித் ஷாவும் விரும்புகின்றனர்... ஒருவர் தனது சொந்த விருப்பு, வெறுப்புக்காக அதிமுக ஒன்றுபடுவதை தடுப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு...
செங்கோட்டையன் பின்னணியில் திமுக உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது... தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி...
தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்... பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு...
சாதிய மோதல்களை களைய வலியுறுத்தி ஜனவரி 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபயணம்... திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடைபயணம் நடைபெறும் என வைகோ அறிவிப்பு...
தனது வீட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் விருந்துவைத்த கமல்ஹாசன்... துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்பு...
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு... 81 விழுக்காடு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விளக்கம்...
டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்... நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகோரிய மனுவுக்கு 3 வாரத்தில் பதில்அளிக்க உத்தரவு...
தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்... அரசு ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்...
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே 13 வயது சிறுவனை கடித்த தெருநாய்... காயமடைந்த சிறுவன், திட்டக்குடி அரசுமருத்துவமனையில் அனுமதி...
பெண்களிடம் அநாகரிகமான கேள்விகளை கேட்பது சாதாரணமானதாக மாறிவிடக்கூடாது... உடல் எடை தொடர்பான கேள்வி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகை கௌரி கிஷன் வலியுறுத்தல்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது... ஒரு கிராம் தங்கம் 11ஆயிரத்து 270 ரூபாய்க்கு விற்பனை...
பொதுமக்களுக்கு வழங்குவதற்காக விஜயகாந்த் வாங்கிய நிலத்தை உரிமை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ... நிலம் தேமுதிகவுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது காங்கேயம் நீதிமன்றம்...
வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை சரிவு.. ஒரு கிலோ தக்காளி 18 ரூபாயாக குறைந்தது...
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை... நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனியில் இன்று கனமழை பெய்யும்...
2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக டிரேடிங் மூலம் சஞ்சு சாம்சனை அணியில் எடுத்துவர சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளதாக தகவல்.. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜடேஜா வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்..

