Headlines | சிகரெட் விலை 72 ரூபாயாக உயர வாய்ப்பு முதல் திருமாவளவனுக்கு சீமான் கேள்வி வரை
புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுரை, திமுக சார்பில் பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது 'வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு', தமிழக கடன் நிலை தொடர்பாக திமுக அரசை விமர்சிக்கும் காங்கிரஸ், காரில் ஏறும்போது தடுமாறி கீழே விழுந்த விஜய் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை பார்க்கவிருக்கிறோம்.
மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் உள்ளிட்ட மருந்துகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்... பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்...
காங்கிரஸ் வெறும் அரசியல் கட்சியல்ல, அது இந்திய ஆன்மாவின் குரல்... காங்கிரஸ் ஸ்தாபன நாளையொட்டி கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிவு...
சிகரெட் விலை 18 ரூபாயில் இருந்து 72 ரூபாயாக உயர வாய்ப்பு... புதிய சட்டத் திருத்தத்தால் மற்ற புகையிலைப் பொருட்களின் விலையும் உயரும் என தகவல்...
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், மீன்பிடி படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்க... மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...
திராவிட இயக்கத்தால் தமிழ்ப் பெண்கள் வெற்றிநடை போடும் போராட்ட வரலாற்றை திமுக மகளிர் அணி மாநாடு சொல்லும்... பல்லடத்தில் இன்று நடைபெறும் மாநாட்டுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு...
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம் 13 லட்சம் பேர் பயன்பெற்றதாக முதல்வர் பெருமிதம்... நலமடைந்தவர்களின் குடும்பத்தினர் கூறும் நன்றிகளோடு திட்டம் தொடர்வதாகவும் நெகிழ்ச்சி.
சென்னை பாரிமுனையில் புதிய துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி... 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம், நவீன நூலகம் கட்டவும் அடிக்கல்...
ஊரக வேலைத் திட்டம் குறித்து திமுக பொய் பிரச்சாரம் செய்வதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு... அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேலை நாட்கள் 150ஆக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி...
திமுக ஆட்சி ஊழலில் திளைப்பதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு... வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் இல்லை என்றபோது வாங்கியக் கடன் தொகை எங்கே போனது என்றும் கேள்வி...
சென்னை சோழிங்கநல்லூர் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன்... டிஜிபி நியமன விவகாரத்தில் முதல்வர் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக பழனிசாமி விமர்சனம்...
சென்னையில் டிசம்பர் 31ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்... கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு...
திமுக கூட்டணியில் காங்கிரஸும் விசிகவும் இருக்குமா என்பது கேள்விக்குறி... ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து...
திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி உத்தரவிட்ட இடத்தில் அடுத்த ஆண்டு தீபமேற்றுவோம்... உதகை பரப்புரையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு...
தமிழ்நாட்டின் கடன் நிலைமை அபாயகரமானதாக உள்ளது... தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக கனிமொழி எம்பி கூறியிருந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம்...
ஐந்தே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடனை இருமடங்காக உயர்த்தியுள்ளது திமுக அரசு... பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவை சுட்டிக்காட்டி பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம்...
தமிழ்நாட்டின் கடன் நிலை தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல்... உத்தர பிரதேசத்துடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவது முறையற்றது என, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவு...
திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் எண்ணம் நிறைவேறாது... இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து...
பாஜகவுடன் கூட்டணி அமைத்து மங்களூரில் எம்எல்ஏவானது யார்? ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளைகள் என விமர்சித்த திருமாவளவனுக்கு சீமான் கேள்வி...
ஜனவரி மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவு. நல்ல கூட்டணி அமையும் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி...
காரில் ஏறும்போது தடுமாறி கீழே விழுந்த தவெக தலைவர் விஜய்... இசை வெளியீட்டு விழாவில் சென்னை திரும்பியபோது ரசிகர்கள் முண்டியடித்ததால் விபரீதம்...
சென்னையில் 3ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் கைது... சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சாலையில் அமர்ந்து முழக்கம்...
நீலகிரி, கொடைக்கானலுக்கு தொடரும் உறைபனி எச்சரிக்கை... தமிழ்நாட்டில் சில பகுதிகளில் பனிமூட்டம் நிலவக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்...
விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாத் தளங்களில் குவிந்த மக்கள்... சென்னை மெரினா கடற்கரையில் அலைமோதிய கூட்டம்...
கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு... அப்துல் கலாமிற்கு பிறகு நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றார்...
இத்தாலி நாட்டில் சாம்பலை கக்கும் எட்னா எரிமலை... விமானங்கள் எச்சரிக்கையுடன் இயங்க ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிப்பு...

