“எனது மகன் அவர் வேலையை செய்வதில் திடமாக இருந்தார்”-பத்திரிகையாளர் தனிஷ் சித்திகின் தந்தை

“எனது மகன் அவர் வேலையை செய்வதில் திடமாக இருந்தார்”-பத்திரிகையாளர் தனிஷ் சித்திகின் தந்தை

“எனது மகன் அவர் வேலையை செய்வதில் திடமாக இருந்தார்”-பத்திரிகையாளர் தனிஷ் சித்திகின் தந்தை
Published on

"எனது மகன் அவரது வேலையை செய்வதில் உறுதியாக இருந்தார்" என தலிபான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் தந்தை முகமது அக்தர் சித்திகி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திய புகைப்பட பத்திரிகையாளர் தனிஷ் சித்திகி. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவர் குறித்த நீங்கா நினைவுகளை பகிர்ந்துள்ளார் அவரது தந்தை முகமது அக்தர் சித்திகி.

“ களத்தில் செய்தி சேகரிக்க செல்லும்போது தினமும் இரவு நேரங்களில் அவருடன் போனில் பேசுவது வழக்கம். ஆப்கானிஸ்தானுக்கு செய்தி சேகரிக்க சென்றபோதும் இது தொடர்ந்தது. 

கடைசியாக நான் அவருடன் பேசியபோது அவரது வேலையை செய்வதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவருடன் பேசியபோது தெரியவில்லை” என்றார். 

புலிட்சர் விருது வென்ற அவரது மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தலிபான் பயங்கரவாத அமைப்பு கூட இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com