ராமர் கோயில் இப்படிதான் இருக்கும் ? : மாதிரி புகைப்படம் வெளியீடு

ராமர் கோயில் இப்படிதான் இருக்கும் ? : மாதிரி புகைப்படம் வெளியீடு

ராமர் கோயில் இப்படிதான் இருக்கும் ? : மாதிரி புகைப்படம் வெளியீடு
Published on

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயிலின் மாதிரி புகைப்படம் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நாளை அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் , அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராம்ஜென்ம பூமி அமைப்பின் தலைவர் மகந்த் நிரித்ய கோபால்தாஸ் ஆகியோர் மட்டுமே மேடையில் இருப்பார்கள் என ராம்ஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவுக்கு இதுவரை எங்கும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் எப்படியிருக்கும் என்ற மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த மாதிரி புகைப்படத்தின்படி, கோயிலின் உச்சியில் காவிக்கொடி பறக்க, அழகான கட்டமைப்புகளுடன் ராயில் கோயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com