\
நான் நிரபராதி... மல்லையா திட்டவட்டம்!

நான் நிரபராதி... மல்லையா திட்டவட்டம்!

நான் நிரபராதி... மல்லையா திட்டவட்டம்!
Published on

தான் நிரபராதி என்பதை நிரூபிக்க போதிய ஆதாரம் உள்ளது என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கியை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிய கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா, “என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரிக்கிறேன். நான் நீதிமன்ற விசாரணையில் இருந்து தப்பிச் செல்லவில்லை. நான் நிரபராதி என்று நிரூபிப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன” என்று வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் கூறினார்.

61 வயதான விஜய் மல்லையா மீது ரூ.9,000 கோடி ரூபாய் வங்கிக்கடனை திருப்பி செலுத்தாத குற்றசாட்டின் பேரில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த கடன் பாக்கியை திருப்பிச் செலுத்தாத மல்லையா இந்தியாவிலிருந்து தப்பி லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com