“திருக்குறளின் ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்” மோடியை தொடர்ந்து ராகுலும் புகழாரம்

“திருக்குறளின் ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்” மோடியை தொடர்ந்து ராகுலும் புகழாரம்
“திருக்குறளின் ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்” மோடியை தொடர்ந்து ராகுலும் புகழாரம்

திருக்குறளின் கருத்துக்களை கண்டு வியக்கிறேன் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மோடி தமிழின் பெருமை குறித்தும் இலக்கியங்கள் குறித்தும் அவ்வபோது எடுத்துரைத்து வருகிறார். தற்போது அவரின் ட்விட்களும் தமிழில் இடம்பெறுவதை பார்க்க முடிகிறது. முக்கியமாக தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் திருக்குறளையும் அதன் கருத்துக்களையும் எடுத்துக்கூறி வியப்படைய செய்கிறார்.

இதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது கூட திருக்குறள் வழி செயல்படும் மோடிக்கு பாராட்டுகள் எனத் தெரிவித்தார். அதாவது ''பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து'' என்பது திருக்குறள். நோயின்மை, செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, பாதுகாப்பு குறித்து இந்த குறள் விளக்குகிறது. இதில் பிணியின்மை என்பது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தையும், விளைவின்பம் என்பது விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்பதையும், ஏமம் என்பது நாட்டின் பாதுகாப்பையும் குறிக்கிறது” என விளக்கிப் பேசினார்.

சமீபத்தில் கோவை வந்த பிரதமர் மோடியும் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார். உழவு குறித்து திருவள்ளுவர்,
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ என்று திருக்குறளைக் கூறினார். பின்னர், அந்த திருக்குறளுக்கு உரிய விளக்கத்தையும் அவர் விளக்கினார்.

இவ்வாறு மத்தியில் திருக்குறளின் பெருமை ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் திருக்குறளை புகழ்ந்துள்ளார். அதாவது ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "திருக்குறளை படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்!" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com