அகில இந்திய ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் #Chennai : காரணம் என்ன?

அகில இந்திய ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் #Chennai : காரணம் என்ன?
அகில இந்திய ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் #Chennai : காரணம் என்ன?

அகில இந்திய அளவிலான ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது #Chennai. 

வழக்கமாக ட்விட்டர் தளத்தில் ஏதேனும் ஒரு ஹாஷ்டேக் டிரெண்டாகி கொண்டே இருக்கும். இது இன்றைய டிஜிட்டல் யுகத்தின் நியதி என்றும் சொல்லலாம். 

இந்நிலையில், #Chennai தற்போது இந்திய ட்விட்டர் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. அதற்கு காரணம் பல இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வருகை தந்திருப்பது முதல் காரணமாக பார்க்கப்படுகிறது. 

சென்னைக்கு வந்துள்ள அவரை பாஜக கட்சி சார்ந்த ஆதரவாளர்கள் “வருக… வருக..” என டிரெண்ட் செய்கின்றனர். பொதுமக்களில் சிலர் அவரது வருகையை முன்னிட்டு போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளதை மேற்கோள் காட்டியும் சென்னையை டேக் செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com