மாணவன் கொலையில் பள்ளி மீது நடவடிக்கை: ஹரியானா அமைச்சர் உறுதி
குர்கானில் உள்ள ரியான் சர்வதேசப் பள்ளி நிர்வாகம் மற்றும் உரிமையாளர் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹரியானா கல்வி அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு குர்கானில் உள்ள ரியான் சர்வதேசப் பள்ளியில் 7 வயது மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்ட மாணவரின் தந்தை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பள்ளி நிர்வாகம் மற்றும் உரிமையாளர் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி நிர்வாகம் மீது சிறார் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹரியானா கல்வி அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் நபர், ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ராம் பிலாஸ் சர்மா கூறியுள்ளார்.