இந்தியா
பிரசவ நேரத்தில் கணவருக்கு 15 நாட்கள் விடுமுறை: ஹரியானா அரசு முடிவு
பிரசவ நேரத்தில் கணவருக்கு 15 நாட்கள் விடுமுறை: ஹரியானா அரசு முடிவு
மனைவியின் பிரவச நேரத்தில் பிறக்கும் குழந்தையை பராமரிப்பதற்காக அரசுத் துறையில் பணியாற்றும் ஆண்களுக்கு 15 நாட்கள் விடுமுறை வழங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
ஹரியானாவில் மனோகர் லால் கட்டர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹரியானா அரசு, பெண்களின் நலன் கருதி அவர்களின் பிரசவ நேரத்தில், அரசுத் துறையில் பணியாற்றும் கணவர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளது. பொதுவாக பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் பிரசவ நேரத்தில் 6 மாதம் வரை விடுமுறை வழங்கும் வழக்கம் இந்தியாவில் இருக்கும் நிலையில், கணவர்களுக்கு விடுமுறை வழங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுமட்டுமில்லாமல் மாநிலத்தில் பெண் போலீசாருக்கான இடஒதுக்கீட்டையும் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.