2017-ஆம் ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் தட்டிச் சென்றார். அழகிப் பட்டத்திற்கான கிரீடம் அவருக்கு சூட்டப்பட்டது.
52-ஆவது மிஸ் இந்தியா பட்டத்திற்கான போட்டி மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் 30 மாநிலங்களை சேர்ந்த பல்வேறு அழகிகள் கலந்து கொண்டு மேடையில் ஒய்யாரமாக நடந்தனர். இறுதியில் நடுவர்கள் குழு இந்தாண்டிற்கான மிஸ் இந்தியாவாக ஹரியான மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லாரின் பெயரை அறிவித்தது. இதனையடுத்து மனுஷி மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கினார். அவருக்கு மிஸ் இந்தியா அழகிப் பட்டத்திற்கான கிரீடம் சூட்டப்பட்டது. ஜம்மு -காஷ்மீரைச் சேர்ந்த சனா தூவா இரண்டாம் இடத்தையும் , பீகாரைச் சேர்ந்த பிரியங்கா குமார் மூன்றாம் இடத்தையும் வென்றனர். அழகிப் பட்டம் வென்ற மனுஷி சில்லார் உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.