ராகுல் காந்தி
ராகுல் காந்திpt web

ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல்|அரியணை யாருக்கு? பாஜகவுக்கு ஷாக் கொடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Published on

சி-வோட்டர், இந்தியா டுடே இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில், காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 48 இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 27 முதல் 32 இடங்களை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும், மற்ற கட்சிகள் 6 முதல் 11 இடங்கள் வரை வெற்றி பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணி 35 முதல் 45 இடங்கள் வரை கைப்பற்றலாம் என கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 24 முதல் 34 இடங்கள் கிடைக்கும் என முடிவுகள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஷிவம் துபே விலகல்.. மாற்றுவீரராக சேர்க்கப்பட்ட MI வீரர்!

ரிபப்ளிக் நடத்திய கருத்துக் கணிப்பில், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது. ரிபப்ளிக் நடத்திய கருத்துக் கணிப்பும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான முடிவுகளை தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி
ஜம்மு - காஷ்மீர், ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com