\
ஹரியானாவில் பலூனில் பறந்துவந்த பாகிஸ்தான் 5,000 ரூபாய் நோட்டு

ஹரியானாவில் பலூனில் பறந்துவந்த பாகிஸ்தான் 5,000 ரூபாய் நோட்டு

ஹரியானாவில் பலூனில் பறந்துவந்த பாகிஸ்தான் 5,000 ரூபாய் நோட்டு
Published on

ஹரியானாவில் பலூனில் கட்டி பறக்கவிடப்பட்ட பாகிஸ்தானின் 5,000 ரூபாய் நோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஹரியானாவின் சிர்ஸா பகுதியில் யானை மற்றும் சிங்க முகங்கள் அச்சிடப்பட்ட பலூனில் கட்டப்பட்ட பாகிஸ்தான் 5,000 ரூபாய் மதிப்பிலான நோட்டைப் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ரூபாய் நோட்டு உண்மையானதா, போலியானதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாகிஸ்தானின் தேசத்தந்தையாகக் கருதப்படும் முகமதுஅலி ஜின்னா உருவம் அச்சிடப்பட்ட அந்த ரூபாய் நோட்டு பழமையானதாகக் காட்சியளித்ததால் கைரேகை நிபுணர்கள் மூலம் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com