படேல் சமூக மக்களுக்காக போராடி வந்த ஹர்திக் படேல் தனது பால்ய கால தோழியை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.
குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி கடந்த 2015-ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் படேல். இவருக்கு வயது 25. இவர் தனது சிறுவயது முதல் நெருங்கிய தோழியாக இருந்து வரும் கிஞ்சல் பரிக்கை வரும் ஜனவரி 27-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார்.
குஜராத்தின் சுரேந்தர்நகர் மாவட்டத்தில் உள்ள டிக்சார் கிராமத்தில் மிக எளிய முறையில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது. இரு வீட்டார் தரப்பிலும் தலா 50 பேர் என மொத்தம் 100 பேர் மட்டுமே இந்தத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹர்திக் படேல் குறித்த திருமண செய்தியை அவரின் தந்தையான பாரத் படேலும் உறுதி செய்துள்ளார். தனது மகனும், கிஞ்சல் பரிக்கும் பால்ய காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.