பால்ய கால தோழியை கரம் பிடித்தார் ஹர்திக் படேல்

பால்ய கால தோழியை கரம் பிடித்தார் ஹர்திக் படேல்

பால்ய கால தோழியை கரம் பிடித்தார் ஹர்திக் படேல்
Published on

படேல் சமூகத்துக்காக போராடிய ஹர்திக் படேல் தனது பால்ய கால தோழியை திருமணம் செய்துகொண்டார்

குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி கடந்த 2015-ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் படேல். இவருக்கு வயது 25. இவர் தனது சிறுவயது முதல் நெருங்கிய தோழியாக இருந்து வரும் கிஞ்சல் பரிக்கை இன்று திருமணம் செய்துகொண்டார்.

25 வயதாகும் ஹர்திக் படேல், பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார். சுரேந்திராநகர் மாவட்டம், திக்சார் கிராமத்தில் இவர்களது காதல் திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றது. எளிய முறையில் நடக்கிற மண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் என மொத்தம் 100 பேர் மட்டுமே பங்கேற்றார்கள். அகமதாபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக ஹர்திக் படேலின் திருமண செய்தியை அவரின் தந்தையான பாரத் படேலும் உறுதி செய்துள்ளார். தனது மகனும், கிஞ்சல் பரிக்கும் பால்ய காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com