தமிழில் பொங்கல் வாழ்த்துக்கூறி அசத்திய ஹர்பஜன் சிங்!

தமிழில் பொங்கல் வாழ்த்துக்கூறி அசத்திய ஹர்பஜன் சிங்!

தமிழில் பொங்கல் வாழ்த்துக்கூறி அசத்திய ஹர்பஜன் சிங்!
Published on

மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல் என இந்திய கிரிக்கெட்  அணியின் சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறி அசத்தியுள்ளார்.

ட்விட்டரில் பொங்கல் வாழ்த்துக்கூறிய கூறியுள்ள அவர், “வேகமும் , விவேகமும், உழைப்பும், தூய்மையும் சொத்தாய் கொண்ட தமிழ் மக்கள் வாழ்வில் மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல். என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் என்றும் அன்புடன் உங்கள், ஹர்பஜன் சிங் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழில் வாழ்த்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com