மாட்டுக்கறி உண்பவர்களை நடுத்தெருவில் தூக்கிலிட வேண்டும்: சாக்ஷி சரஸ்வதி
மாட்டுக்கறி உண்பவர்களை அரசாங்கம் நடுத்தெருவில் தூக்கில் போட வேண்டும் என்று சனாதன் தர்மா பிரச்சார் சேவா சமிதி என்ற இந்து வலதுசாரி அமைப்பின் தலைவர் சாக்ஷி சரஸ்வதி பேசியுள்ளார்.
கோவாவில் ஹிந்து ஜனஜாகிருதி சமிதி நடத்திய மதமாற்ற விழாவில் பேசிய சாக்ஷி சரஸ்வதி, “பெருமைக்காக மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை நடுத்தெருவில் தூக்கில் போட்டுக் கொல்ல வேண்டும். அப்போது மாடுகளைப் பாதுகாப்பதில் பொருப்பாக இருப்பார்கள். லவ் ஜிஹாத் மூலம் பாதிக்கப்படும் நம் பெண்களை பாதுகாக்க வேண்டும். இப்போது அதற்காக ஆயுதம் தூக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் நாம் தகர்க்கப்படுவோம். முதலில் நம் இந்து மக்களை இந்துக்களாக மாற்ற வேண்டும். ஏனென்றால் அவர்கள், செக்குலர் (மதச்சார்பின்மை) என்ற பெயரில் மத உணர்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள். பசு நம்முடைய தாய், நம்முடைய தாயையே உணவாக உட்கொள்வதா?” என்று பேசினார்.
சாக்ஷியின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.