\
ஹந்த்வாரா என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஹந்த்வாரா என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஹந்த்வாரா என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on: 

ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

யுனிசோ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று இரவு பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 

இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார் என்பது அடையாளம் தெரியவில்லை. யுனிசோ பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட போதும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com