மீன் விற்கும் மாணவியை விமர்சித்த மேலும் ஒருவர் கைது!

மீன் விற்கும் மாணவியை விமர்சித்த மேலும் ஒருவர் கைது!
மீன் விற்கும் மாணவியை விமர்சித்த மேலும் ஒருவர் கைது!

கேரளாவில் பகுதி நேரமாக மீன் விற்று, படித்து வரும் மாணவியை மோசமாக விமர்சித்த மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஹனன் ஹமீது. (21) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (கெமிஸ்ட்ரி) இறுதியாண்டு படிக்கிறார். இவரது தந்தை குடும்பத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார். தாயாருக்கு மனநிலை சரியில்லை. இதன் காரணமாக, மாலை நேரத்தில் மீன் விற்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார் ஹனன். அவரது வாழ்க்கை குறித்து கேரளாவின் ’மாத்ருபூமி’ நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. கடும் போராட்டத்துக்கு இடையே யாரிடமும் உதவி கேட்காமல், படித்துக்கொண்டே உழைக்கும் ஹனனின் கதையை படித்த பலருக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டது.

சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். இயக்குனர் அருண் கோபி, நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்கும் படத்தில் அவருக்கு வாய்ப்பளிக்கப் போவதாக அறிவித்தார். இந்தக் கட்டுரை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதில் ஹனனின் தன்னம்பிக்கைக் குறித்து பாராட்டி பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இது பொய் என்றும், பணம் பறிப்பதற்காக இவர் இப்படி செய்வதாகவும் சிலர் கிண்டலடித்து கருத்து பதிவிட்டிருந்தனர். அவர் 
தொடர்பாக மோசமான வதந்திகளையும் பரப்பினர். இந்நிலையில் அவர் படிக்கும் கல்லூரி முதல்வரும், அவரது நண்பர்களும் ஹனன் கதை
உண்மையானதுதான் என்று தெரிவித்தனர். 

இதையடுத்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், தனது முகநூல் பக்கத்தில், இச்சம்பவம் குறித்து உருக்கமாகப் பதிவிட் டிருந்தார். கிண்டல் செய்வதை அவர் வன்மையாகக் கண்டித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து பேசிய ஹனன், ‘எனக்கு உங்களின் எந்த உதவியும் வேண்டாம். என்னால் இயன்ற வேலையை செய்து என்னைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறினார். 

இந்நிலையில் இந்தச் செய்தி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குத் தெரியவந்தது. அவர், ஹனனை கிண்டல் செய்தவர்களுக்கு கடும் கண்டனத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். ‘ஹனனின் செயலை கண்டு பெருமை பட வேண்டும். அவர் தன்னை மட்டுமல்ல, பல்வேறு வேலைகள் செய்து படித்துக்கொண்டே குடும்பத் தையும் காப்பாற்றுகிறார். அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அவரது வாழ்க்கை கதையை கேட்டு பெருமையாக உணர்ந்தேன். அவருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அவருக்கு அனைத்துவிதமான உதவிகளும் கிடைக் க உத்தரவிட்டுள்ளேன். அவரை கிண்டல் செய்வது கண்டனதுக்கு உரியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட் டுள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஹனன் பற்றி சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சித்த வயநாடு பகுதியைச் சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து குருவாயூரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.இவரும் ஹனனை கடுமையாக விமர்சித்து ள்ளார். மீடியாவை சேர்ந்த ஒருவரிடமும் விசார ணை நடத்தியுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com