hamas join hands with pakistan terror organizations against india
ஹமாஸ்எக்ஸ் தளம்

ட்ரம்ப் பேச்சைத் தொடர்ந்து அடுத்தகட்ட நகர்வு.. இந்தியாவுக்கு எதிராக ஹமாஸ்?

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ முகம்மது மற்றும் லஷ்கர்-இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தினருடன் ஹமாஸ் அமைப்பினரும் தற்போது இணைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Published on

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட் பகுதியில் கடந்த 5ஆம் தேதி ஒற்றுமை தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா இயக்கங்களின் முக்கிய தளபதிகளுடன் ஈரானிலுள்ள ஹமாஸ் பிரதிநிதி காலித் அல் காதுமி உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

’காஷ்மீர் ஒற்றுமையும் ஹமாஸ் செயல்பாடுகளும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியாவிற்கு எதிராகவும் இந்திய பகுதி காஷ்மீரை மீட்க உறுதி ஏற்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

hamas join hands with pakistan terror organizations against india
பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸ் போராளிகள்AFP

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பைக் பேரணியில் பங்கேற்ற பயங்கரவாத அமைப்பினர் ஹமாஸ் கொடியுடன் சென்றனர். காசாவில் இருந்தவாறு இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்த கிளர்ச்சிக்குழுவான ஹமாஸ் தற்போது காஷ்மீர் பகுதிக்கு வந்துள்ளது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஹமாசும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையிலும் காசாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்று ட்ரம்ப் பேசியுள்ள நிலையிலும் ஹமாஸ் அமைப்பின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

hamas join hands with pakistan terror organizations against india
விடுவிக்கப்பட வேண்டிய 8 பிணைக்கைதிகள் உயிரிழப்பா? ஹமாஸ் சொல்வது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com