இந்தியா
ஏராளமான குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவரை பணி நீக்கம் செய்தது உ.பி. அரசு
ஏராளமான குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவரை பணி நீக்கம் செய்தது உ.பி. அரசு
உத்தரப் பிரதேசத்தில் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவரை அம்மாநில அரசு பணி நீக்கம் செய்துள்ளது.
கோரக்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் சுமார் 66 லட்சம் ரூபாய் வரை நிலுவை தொகை வைத்ததால் தனியார் நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திக் கொண்டது. இந்த விபரீதம் காரணமாக 63-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
அதேசமயம் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் கபீல் கான் என்பவர் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார். கபீல் கானை பெற்றோர்கள் பாராட்டி வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசு அவரை பதவியில் இருந்து நீக்கி பூபேந்தர் சர்மாவை அவரது இடத்தில் நியமித்துள்ளது.