காஸ்மோஸ் வங்கியில் இருந்து ரூ.94 கோடியை திருடிய ஹேக்கர்கள்..!

காஸ்மோஸ் வங்கியில் இருந்து ரூ.94 கோடியை திருடிய ஹேக்கர்கள்..!
காஸ்மோஸ் வங்கியில் இருந்து ரூ.94 கோடியை திருடிய ஹேக்கர்கள்..!

மகாராஷ்ட்ராவில் காஸ்மோஸ் வங்கியில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.94 கோடி திருடப்பட்ட சம்பவம் வங்கி ஊழியர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வங்கிகள் பெயரை சொல்லி யாராவது ஏடிஎம் பின் நம்பர், ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம் என வங்கி சார்பில் நமக்கு பல முறை எச்சரிக்கை வந்திருக்கும். ஆனால் இங்கோ காஸ்மோஸ் வங்கியில் இருந்து ஆன்லைன் மூலமே ரூ.94 கோடி திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஸ்மோஸ் வங்கியின் மெயின் சர்வர் புனேவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சர்வரை ஹேக் செய்து பணத்தை ஹேக்கர்கள் ஆன்லைன் வழியாக திருடிவிட்டதாக வங்கி சார்பில் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வங்கியின் சர்வரை ஹேக்கர்கள் ஹேக் செய்து 78 கோடி ரூபாயை வெவ்வேறு பரிவர்த்தனைகள் மூலம் வெவ்வேறு நாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.5 கோடி ரூபாய் மட்டும் இந்தியாவில் உள்ள கணக்கில் பரிவர்த்தனை ஆகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சர்வரை மீண்டும் செய்த ஹேக்கர்கள் 14 கோடி ரூபாயை ஹாங்காங்கில் உள்ள ஏஎல்எம் டிரேடிங் லிமிடெட் நிறுவன வங்கி கணக்கிற்கு மாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புனே சைபர் கிரைம் போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com