3 கோடி பயணிகளின் தகவல்கள் திருட்டு? - என்ன சொல்கிறது இந்திய ரயில்வே?

3 கோடி பயணிகளின் தகவல்கள் திருட்டு? - என்ன சொல்கிறது இந்திய ரயில்வே?
3 கோடி பயணிகளின் தகவல்கள் திருட்டு? - என்ன சொல்கிறது இந்திய ரயில்வே?

நாடு முழுவதும் உள்ள 3 கோடி ரயில் பயணிகளின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக வெளியான தகவலை இந்திய ரயில்வே திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேயின் 90 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்ததைப் போன்று, தற்போது இந்திய ரயில்வே இணையதளத்திலிருந்து மீண்டும் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 3 கோடி ரயில் பயணிகளின் தகவல்கள் இணையத்தில் வெளியாக உள்ளதாகவும், இந்த தகவல் திருட்டை மேற்கொண்டவர்கள் தங்களை 'ஷேடோஹேக்கர்கஸ்' என அழைத்துக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் திருட்டில் பயணிகளின் பெயர், இணைய முகவரி, செல்போன் எண், பாலினம், முகவரி மற்றும் இதர தனிப்பட்ட தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். 

அதேபோல் பயணிகளின் பயண விவரங்களின் ஸ்கீரின்ஷாட்டுகளை வெளியிட்டுள்ள ஹேக்கர்கள், இந்த விவரங்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. எனினும் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய ரயில்வே நிர்வாகம், பயனர்களின் தரவுகள் எதுவும் கசியவில்லை எனக் கூறியுள்ளது.

"ஐஆர்சிடிசி சர்வரிலிருந்தோ அல்லது ரயில்வே சர்வரிலிருந்தோ தரவுகள் கசிவு எதுவும் நடக்கவில்லை. ஐஆர்சிடிசி அல்லது சிஆர்ஐஎஸ் சர்வரில் இருந்து தகவல் கசிந்ததாகக் கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது" என்று ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அண்மையில் டெல்லி எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதளம் சைபர் தாக்குதலை எதிர்கொண்டு அதன் சர்வர்கள் முடங்கியது. இந்த சைபர் தாக்குதலினால் நோயாளிகள் மருத்துவா்களுடான சந்திப்பிற்கான இணைய பதிவு வசதி, அத்தியாவசியமான மருத்துவ பிரிவுகளின் சாவா்கள் செயல்படவில்லை என எய்ம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சர்வர்கள் மீட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை சிபிஐக்கு கடிதம் எழுதியுள்ள கடிதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இணைய சர்வர்கள் சீனா மற்றும் ஹாங்காங்கை மையமாக வைத்து சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com