ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் சிவலிங்கம் - வாரணாசி நீதிமன்றம் அதிரடி

ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் சிவலிங்கம் - வாரணாசி நீதிமன்றம் அதிரடி
ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் சிவலிங்கம் - வாரணாசி நீதிமன்றம் அதிரடி

ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் சிவலிங்கத்தின் வயதை கண்டறிய அறிவியல் ஆய்வு நடத்தக்கோரிய இந்து அமைப்பின் மனுவை வாரணாசி நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதிக்கக்கோரி, இந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, வீடியோவாக பதிவு செய்யவும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது.

இந்நிலையில், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நீதிமன்றம் இந்த மனு விசாரணைக்கு உகந்தது என்றது.

இந்நிலையில் இந்த மூல வழக்கின் விசாரணை வாரணாசி நீதிமன்றத்தில் தொடங்கியது. மசூதிக்குள் இருக்கும் சிவலிங்கத்தின் புராதானத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதிக்கக்கோரி இந்து அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு இஸ்லாமிய அமைப்புகளுக்கு வாரணாசி நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட இருந்தது. ஆனால் அன்றைய தினம் இந்து வழிபாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்ததால், உத்தரவு அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைகப்பட்டது.

இதன்பிறகு இந்து அமைப்புகள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்பன் டேட்டிங் சோதனை கேட்கவில்லை எனவும், அறிவியல் ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியது போல், அங்கு சிவலிங்கம் இருந்ததா? அல்லது நீரூற்று இருந்ததா? என்பதை மட்டுமே கண்டறிய வேண்டும் என கோரிக்கை வைத்தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் இன்று உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. அதில் ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் சிவலிங்கத்தின் வயதை கண்டறிய அறிவியல் ஆய்வு நடத்த கோரிய இந்து அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து இந்து அமைப்பினர் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com