அசாமில் கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டி !

அசாமில் கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டி !

அசாமில் கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டி !

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அசாம் மாநிலம் குவஹாத்தியில் ரயில் பெட்டிகள் தனி மருத்துவ வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை தருவதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கமாக்யா மற்றும் குவஹாத்தியில் ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மொத்தம் 9 கேபின்கள் கொண்ட பெட்டிகளில் ஒரு கேபினுக்கு ஒரு நோயாளி என தனிமைப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏசி அல்லாத ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் படுக்கை வார்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இருக்கும் என்றும், இரண்டு அறைகளுக்கு இடையே பிளாஸ்டிக் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 14-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் நாள்தோறும் இயக்கப்பட்ட 13 ஆயிரத்து 523 ரயில்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன. காலியாக இருக்கும் பெட்டிகள் சில மாற்றங்களுடன் தனித்தனி வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே நிர்வாகம் கூட சென்னையில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே வடக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் ஏசி இல்லா ரயில் பெட்டியொன்று கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com