\
மேற்குவங்கம்: கவுஹாத்தி-பிகானர் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் மூவர் பலி-மம்தா இரங்கல்

மேற்குவங்கம்: கவுஹாத்தி-பிகானர் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் மூவர் பலி-மம்தா இரங்கல்

மேற்குவங்கம்: கவுஹாத்தி-பிகானர் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் மூவர் பலி-மம்தா இரங்கல்
Published on

ராஜஸ்தானிலிருந்து அசாம் புறப்பட்ட கவுகாத்தி - பிகானர் விரைவு ரயில் மேற்கு வங்கத்தில் மாய்நகுறி என்னும் இடத்தில் தடம் புரண்டது

மாலை 5 மணியளவில் நடந்த இந்த விபத்து, பனி மூட்டம் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் காயங்களுடன் 15 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில அதிகாரிகள் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com