பகலை இரவாக்கிய கருமேகங்கள்! வியந்துபோன குருகிராம் மக்கள் - வைரலாகும் புகைப்படங்கள்

பகலை இரவாக்கிய கருமேகங்கள்! வியந்துபோன குருகிராம் மக்கள் - வைரலாகும் புகைப்படங்கள்

பகலை இரவாக்கிய கருமேகங்கள்! வியந்துபோன குருகிராம் மக்கள் - வைரலாகும் புகைப்படங்கள்
Published on

கடந்த சில நாட்களாக டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிகக் கடுமையாக மழை பெய்து வருகிறது. வட மாநிலத்தவர்களின் ட்விட்டர் பக்கம் சென்றாலே மழையும் வெள்ளமுமாக எடுத்த வீடியோக்கள் ததும்பிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையில் பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்ட வீடியோ வைரலாக வலம் வந்தது. 

ஹரியானாவில் உள்ள குருகிராம் வாழ்மக்கள் இன்று தங்கள் வீட்டின் பால்கனிகளிலிருந்தும் மொட்டை மாடிகளிலிருந்தும் ஒரு வியப்பூட்டும் காட்சியைக் கண்டுள்ளனர். நகரில் பகலை இரவாக்கும் வகையில் சூழ்ந்த கருமேகங்கள் பெருங்குவியலாக நகர்ந்து கொண்டிருந்தது. காண்பதற்கே சற்று மிரட்சியாகவும் ரம்மியமாவும் இருந்தது.

குருகிராமை சூழ்ந்த வியப்பூட்டும் இந்த வான் மேகங்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com