7 வயது மகன் முன், அப்பா, அம்மா குத்திக்கொலை: கொடூரமான நண்பன்!

7 வயது மகன் முன், அப்பா, அம்மா குத்திக்கொலை: கொடூரமான நண்பன்!

7 வயது மகன் முன், அப்பா, அம்மா குத்திக்கொலை: கொடூரமான நண்பன்!
Published on

ஏழு வயது மகனின் முன்பு, அப்பா, அம்மா குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் எடாவா பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் சிங் (35). இவர் மனைவி ஜோதி. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவர்கள், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள உத்யோக் நகரில் வசித்து வந்தனர். சிங், குருகிராம் சாங்கர் சாக்கில் உள்ள பிபிஓ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை, சிங்கும் அவர் மனைவியும் கொல்லப்பட்டு கிடப்பதாகவும் கொலைகாரன் வீட்டிலேயே இருப்பதாகவும் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று கொலையாளியை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். 

கொல்லப்பட்ட சிங்குடன் சில வருடங்களுக்கு முன் வேலை பார்த்தவர் அபினவ் அகர்வால். சிங்குக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரிடம் ரூ.1.5 லட்சத்தை வாங்கியிருந்தார் அகர்வால். ஆனால், சொன்னபடி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறார், சிங். இது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை பிரச்னையை பேசி முடிக்கலாம் என்று சிங்கின் வீட்டுக்கு வந்துள்ளார், அகர்வால். அப்போது இருவரும் பணப்பிரச்னை பற்றி பேசினர். பின்னர் ஜாலியாக வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மது குடித்துள்ளனர். இவர்களின் வீட்டின் அருகில் வசிக்கும் சிங்கின் சகோதரர் சைலேந்திரா, இதைப் பார்த்துள்ளார். பின்னர், இவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். 

இந்நிலையில் நேற்று அதிகாலை 3.55 மணியளவில் சிங்கின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அது இரண்டா வது தளத்தில் இருக்கும் வீடு. கீழே வசிப்பவர்கள் சத்தம் கேட்டு மேலே ஓடியுள்ளனர். அப்போது மாடிப்படியில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலே சென்றபோது, படியில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார் ஜோதி. உள்ளே பெட்ரூமில் சிங்கும் ரத்தவெள்ளத்தில் மிதந்தார். சிங்கின் அருகில் அகர்வால் அமர்ந்திருந்தான். சிங்கின் ஏழு வயது மகன் அருகில் அழுதபடி நின்றிருந்தான். 

இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிங்கையும் ஜோதியையும் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

பணப்பிரச்னை காரணமாக தகராறு வந்ததால் சிங்கை கொல்ல முடிவு செய்துள்ளார் அகர்வால். அதன்படி அவரை நன்றாக குடிக்க வைத்துள்ளார். தான் குடிக்கவில்லை. பின்னர் அதிகாலையில் கத்தியால் குத்திக் கொல்லும்போது, சிங்கின் சத்தம் கேட்டு அவர் மனைவி வந்தார். அவர் கூச்சல் போட்டதும் அவரையும் கொல்ல முயன்றார். தப்பி ஓடிய அவரை மாடிப்படியின் அருகில் குத்தி சாய்த்தார். பின்னர் வெளியே தப்பி ஓட முயன்றபோது மெயின் கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் எங்கும் தப்ப முடியாததால் சிங்கின் உடல் அருகிலேயே அகர்வால் அமர்ந்துள்ளார். அவரை கைது செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஏழு வயது மகனின் கண்முன்னே, பெற்றோர் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com