வேலையின்மையால் மன உளைச்சல்... காருக்குள் இளைஞர் தற்கொலை!

வேலையின்மையால் மன உளைச்சல்... காருக்குள் இளைஞர் தற்கொலை!

வேலையின்மையால் மன உளைச்சல்... காருக்குள் இளைஞர் தற்கொலை!
Published on

ஹரியானாவில், வேலையில்லாத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் காருக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டார்

ஹரியானாவின் குருக்ராம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர், ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதன் பிறகு வேறு வேலைக்கும் போகாமல் அவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிக மன அழுத்தம் காரணமாக தன்னுடைய காரிலேயே அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்னதாக தன்னுடைய உறவினர் ஒருவருக்கு தற்கொலை தொடர்பாக மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பியுள்ளார். காலை 9 மணிக்கு மின்னஞ்சல் அனுப்பிய இளைஞர் அதன் பிறகு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தெரிவித்துள்ள அந்த உறவினர், ''நான் மதியம் 1 மணிக்கு மின்னஞ்சலைப் பார்த்தேன். அதன் பிறகு அந்தக் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தோம். காரில் நினைவிழந்த நிலையில் இருந்தவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com