\
குர்பானிக்காக பசு, காளைகளை வெட்டினால் குண்டர் சட்டம்!

குர்பானிக்காக பசு, காளைகளை வெட்டினால் குண்டர் சட்டம்!

குர்பானிக்காக பசு, காளைகளை வெட்டினால் குண்டர் சட்டம்!
Published on: 

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி எனும் முறையில் பசு, காளை, ஒட்டகத்தை வெட்டினால் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரப்பிரதேசத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காவல் நிலையங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி பக்ரீத் பண்டிகையின் போது குர்பானி எனும் முறையில் இன்று முதல் 4ஆம் தேதி வரை பசு, காளை மற்றும் ஒட்டகத்தை வெட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. தடையை மீறி குர்பானிக்காக பசு, காளை, ஒட்டகத்தை வெட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com