குஜராத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கூட்டமாக கடக்க முயன்ற சிங்கங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிங்கங்கள், பிபாவாவ், ரஜூலா தேசிய நெடுஞ்சாலையைக் கூட்டமாக கடக்க முயன்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும், மற்ற வாகனங்களில் சென்றவர்களும் சிங்கங்களைப் பார்த்து அஞ்சி அப்படியே சிறிது நேரம் நின்றுவிட்டனர். சிங்கங்கள் சாலையைக் கடந்த பின்னர் வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன.