நித்தியானந்தாவுக்கு 'புளூ கார்னர் நோட்டீஸ்' ? குஜராத் போலீஸ் திட்டம்

நித்தியானந்தாவுக்கு 'புளூ கார்னர் நோட்டீஸ்' ? குஜராத் போலீஸ் திட்டம்

நித்தியானந்தாவுக்கு 'புளூ கார்னர் நோட்டீஸ்' ? குஜராத் போலீஸ் திட்டம்
Published on

பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தாவுக்கு புளூ‌ கார்னர் நோட்டீஸ் அளிக்க குஜராத் மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது.‌

குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்தக்கோரும் புளூ கார்னர் நோட்டீஸை நித்தியானந்தாவுக்கு வழங்க வேண்டும் என மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்திரவதை செய்தல் போன்ற குற்றங்களுக்காக நித்தியானந்தாவை தேடி வருவதாகவும், அவரின் இருப்பிடம் தெரியாத நிலையில், புளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலிடம் பெற்றுத் தருமாறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எல்லைகளைத் தாண்டிய நடவடிக்கைகளுக்காக சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போல் 8 வகையான நிறங்களில் நோட்டீஸ் பிறப்பிக்கும். நோட்டீஸ் அளிக்கப்பட்ட நபர் எந்த நாட்டில் இருந்தாலும் அவரைக் கண்டுபிடித்து சரணடைய வைத்து உரிய நாட்டிடம் ஒப்படைக்குக் பொறுப்பை இண்டர்போல் ஏற்கும். அந்தவகையில், நித்தியானந்தாவுக்கு புளூ கர்னர் நோட்டீஸ் அளிக்க மாநில குற்றவியல் விசாரணை துறையை அகமதாபாத் காவல்துறை நாடியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com