குஜராத்: திருமணத்தன்று மாதவிடாய்... விவாகரத்துகோரி அதிர்ச்சியளித்த கணவன்!

குஜராத்: திருமணத்தன்று மாதவிடாய்... விவாகரத்துகோரி அதிர்ச்சியளித்த கணவன்!

குஜராத்: திருமணத்தன்று மாதவிடாய்... விவாகரத்துகோரி அதிர்ச்சியளித்த கணவன்!
Published on

திருமண நாளில் தனது “மாதவிடாய்” பற்றி முன்னதாகவே வெளிப்படுத்தத் தவறியதாக, ஒருவர் தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.

திருமண நாளன்று மணப்பெண்ணின் ”மாதவிடாய்” பற்றி அறிந்ததும் தானும், தனது தாயும் அதிர்ச்சியடைந்ததாக விவாகரத்து கோரிய அந்த நபர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தங்களின் 'நம்பிக்கை மீறப்பட்டது' என்றும் அந்த நபர் கூறினார்.

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்த அந்த நபர், திருமண விழா முடிந்ததும் பிரார்த்தனைக்காக ஒரு கோயிலுக்குச் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மனைவி தனது ”மாதவிடாய்” பற்றி அவரிடம் சொன்னதாகக் கூறினார். கடந்த ஜனவரி மாதம் இந்த ஜோடிக்கு திருமணம் நடந்தது. அந்த பெண் ஆசிரியராகவும், அந்த நபர் ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலை செய்கிறார்கள்.

மேலும் தனது மூத்த சகோதரர் ஏற்கெனவே வீட்டை கவனித்து வருவதால் குடும்ப செலவினங்களுக்கு தான் பணம் கொடுக்கக்கூடாது என்று தனது மனைவி கட்டாயப்படுத்தியதாகவும் அந்த நபர் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வீட்டில் உடனே ஏர் கண்டிஷனரை பொருத்த மனைவி கோரியதாகவும் அந்த நபர் கூறினார். தன்னால் ஏ.சி வாங்க முடியாது என்று அவர் தனது மனைவியிடம் கூறியபோது, சண்டையிட்டுவிட்டு அவர் பெற்றோருடன் வசிக்க வீட்டை விட்டு வெளியேறினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அந்த நபர் “ ஆடம்பர வாழ்க்கைக்கு எதிர்பார்த்து என்னிடம் மோசமாக சண்டையிட்டார். மேலும் அவர் ஒரு நாள் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார்”என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com