குஜராத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்? - ராகுல் காந்தி கேள்வி

குஜராத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்? - ராகுல் காந்தி கேள்வி
குஜராத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்? - ராகுல் காந்தி கேள்வி

குஜராத்தில் 42 பேர் உயிரிழக்கக் காரணமான கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சக்தி எது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ட்விட்டரில் ஹிந்தியில் பதிவிட்டுள்ள அவர், “மது விலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களும் அங்கு தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. காந்தி, சர்தார் பட்டேல் ஆகியோரின் நிலத்தில், கண்மூடித்தனமாக போதைப்பொருள் வியாபாரம் செய்யும் இவர்கள் யார்? இது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்த மாஃபியாக்களுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் மூலம் குஜராத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மற்ற அரசியல் தலைவர்களும் இந்த மரணங்களுக்கு பாரதீய ஜனதா கட்சியின் மாநில அரசாங்கமே பொறுப்பு என்று கூறியுள்ளனர். குஜராத்தில் கடந்த 25ஆம் தேதி கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 42 பேர் உயிரிழந்த நிலையில் 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் மது உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com