\
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் அக். 9-ல் தீர்ப்பு

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் அக். 9-ல் தீர்ப்பு

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் அக். 9-ல் தீர்ப்பு
Published on

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.

2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மீது தீவைக்கப்பட்டது. இந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் 14 குழந்தைகள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அதேபோல், கோத்ரா ரயில் எரிப்புக்கு பின் நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்குகளும் தனியாக நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com