\
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு
Published on

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மீது தீ வைக்கப்பட்டது. இந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் 14 குழந்தைகள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அதேபோல், கோத்ரா ரயில் எரிப்புக்கு பின் நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்குகளும் தனியாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இந்த வழக்குகளை முதலில் விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றம் கடந்த மார்ச் 2011-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதில், 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 63 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com