AI generated image
AI generated image meta ai

காதல் திருமணமா? இனி பெற்றோருக்கு எச்சரிக்கை... குஜராத் அரசு அதிரடி!

ஒரு ஜோடி காதல் திருமண பதிவுக்கு விண்ணப்பித்தவுடன், சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை பெண்ணின் பெற்றோர் வாட்ஸ்அப் மூலம் பெற்றுக் கொள்வார்கள்.
Published on

குஜராத் அரசு, திருமணப் பதிவு விதிகளை கடுமையாக்கியுள்ளது. திருமணப் பதிவு விதிகளை திருத்துவதற்கான வரைவை, அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், காதல் ஜோடி திருமணப் பதிவுக்கு விண்ணப்பித்தால், விண்ணப்ப விவரங்கள் அவர்களது பெற்றோருக்கு வாட்ஸ் அப் வழியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, 40ஆவது நாளிலேயே சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

நாங்கள் காதலுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் போலி அடையாளத்துடன் ஒரு பெண்ணை சிக்கவைக்க யாராவது, 'சலீம் சுரேஷ்' ஆனார் என்றால், அத்தகைய ஏமாற்று வேலையை அரசு அனுமதிக்காது. அதாவது, போலி அடையாளத்துடன் பெண்களை ஏமாற்றுவதைத் தடுக்கவே, விதிகள் திருத்தமென குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.

Harsh Sanghvi
Harsh Sanghvi web

நிர்வாகச் சீர்திருத்தத்தைக் கருத்தில்கொண்டு குஜராத் அரசு திருமணப் பதிவு விதிகளில் திருத்தங்களைத் தொடங்கியுள்ளது, இது தனியுரிமை, பெற்றோரின் ஒப்புதல் மற்றும் அடையாள மோசடிக்கு எதிரான பாதுகாப்புகள் குறித்து அரசியல் மற்றும் சமூகத்தில் கூர்மையான விவாதங்களைத் தூண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com