குஜராத் வெள்ளம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்த சோகம்

குஜராத் வெள்ளம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்த சோகம்
குஜராத் வெள்ளம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்த சோகம்

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். 

குஜராத்தில் பெய்துவரும் கனமழையால் மாநிலத்தில் வடபகுதியில் உள்ள மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பனஸ்கந்தா மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 110ஐத் தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பனஸ்கந்தா மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரி பார்மர் தெரிவித்தார். அவர்களின் உடல் சேற்றில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வெள்ளத்தின் போது தப்பிச் செல்ல வழியில்லாமல் அவர்கள் மாட்டியிருக்கலாம் என்றும் அவர் கூறினார். குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய 36,000க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் மாநில பேரிடர் மீட்பு படையினருடன், ராணுவம் மற்றும் விமானப் படை ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்துக்கு ரூ.500 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com