மீண்டும் குஜராத்தில் பாஜக ஆட்சி.. இந்த முறை 100+ நிச்சயம் - கருத்து கணிப்புகள் சொல்வதென்ன?

மீண்டும் குஜராத்தில் பாஜக ஆட்சி.. இந்த முறை 100+ நிச்சயம் - கருத்து கணிப்புகள் சொல்வதென்ன?
மீண்டும் குஜராத்தில் பாஜக ஆட்சி.. இந்த முறை 100+ நிச்சயம் - கருத்து கணிப்புகள் சொல்வதென்ன?

குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

68 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஹிமாச்சல் பிரதேச மாநில சட்டமன்றத்திற்கு நவம்பர் 12ம் தேதி ஒரே கட்டமாகவும், 182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 (இன்று) ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வரும் எட்டாம் தேதி வெளியிடப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 5.00 உடன் நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

கருத்து கணிப்புகள் நிலவரம்:

குஜராத் - 182 தொகுதிகள் பெரும்பான்மைக்கு 92 இடங்கள்

Republic:

பாஜக : 128-148
காங்கிரஸ் : 30-42
ஆம்ஆத்மி : 2-10
பிற : 0-3

NDTV:

பாஜக : 128
காங்கிரஸ் : 44
ஆம்ஆத்மி : 7
பிற : 3

Newsx:

பாஜக : 117-140
காங்கிரஸ் : 34-51
ஆம்ஆத்மி : 6-13
பிற : 0

News18:

பாஜக : 117-140
காங்கிரஸ் : 34-51
ஆம்ஆத்மி : 6-13
பிற : 0

இமாச்சல் - 68 தொகுதிகள் பெரும்பான்மைக்கு 35 இடங்கள்

Republic:

பாஜக : 34-39
காங்கிரஸ் : 28-33
ஆம்ஆத்மி : 0-1
பிற : 1-4

TimesNow:

பாஜக : 38
காங்கிரஸ் : 28
ஆம்ஆத்மி : 0
பிற : 2

NewsX:

பாஜக : 32-40
காங்கிரஸ் : 27-34
ஆம்ஆத்மி : 0
பிற : 1-2

கருத்துக் கணிப்பு குறித்த விரிவான தகவல்களை காண இந்த வீடியோவை பார்க்கவும்..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com