குஜராத் | தேர்தல் பத்திரம் மூலம் விவசாயியிடம் ரூ.10 கோடி மோசடி!

குஜராத் மாநிலத்தில் விவசாயி ஒருவரை ஏமாற்றி பத்து கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரம்முகநூல்

குஜராத் மாநிலத்தில் விவசாயி ஒருவரை ஏமாற்றி பத்து கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அந்த தேர்தல் பத்திரம் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 2023 அக்டோபர் 11 ஆம் தேதி குஜராத் அன்ஜார் பகுதியை சேர்ந்த தலித் விவசாயி குடும்பத்தின் பெயரில் 11 கோடியே 14 ஆயிரம் ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

10 கோடி ரூபாய் பாஜகவுக்கும், மீதமுள்ள ஒரு கோடியே 14 ஆயிரம் ரூபாய் சிவ சேனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்துடன் தொடர்புடைய வெல்ஸ்பன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், “நிலத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டிய தொகையை நேரடியாக வழங்கினால் வரி பிரச்னை வரும். அதனால் இப்படி வழங்குகிறோம். தேர்தல் பத்திரம் வழியாக வாங்கினால் சில ஆண்டுகளில் 1.5 மடங்காக பணம் திரும்ப கிடைக்கும்” என்று சம்பந்தப்பட்ட விவசாய குடும்பத்திடம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பத்திரம்
காரை திறந்த பாஜக மத்திய அமைச்சர்.. பிரிந்த தொண்டரின் உயிர்.. பரப்புரையின் போது நேர்ந்த சோகம்!

இப்படியாக தங்களை அந்நிறுவனத்தினர் ஏமாற்றிவிட்டதாக விவசாய குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். படிப்பறிவு இல்லாததால் அந்நிறுவனத்தினர் கூறியதை நம்பி தேர்தல் பத்திரம் வாங்கியதாகவும் புகார் அளித்துள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக, பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி அளித்த புகாரின் பேரில் சம்பந்தபப்ட்ட நிறுவன மேலாளர், பாஜக மாவட்ட நிர்வாகி டேனி ரஜினிகாந்த் ஷா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com