குஜராத் அரசின் கொரோனா நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம்

குஜராத் அரசின் கொரோனா நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம்
குஜராத் அரசின் கொரோனா நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம்

குஜராத்தில் கொரோனாவுக்கு எதிரான அரசு நடவடிக்கை குறித்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் குஜராத்தில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குஜராத் மாநில அரசு கொரோனா விவகாரத்தில் சரியாகச் செயல்படவில்லை, மக்கள் உயிரைக் காப்பதில் அலட்சியம் காட்டி வருகிறது என்று குற்றம்சாட்டியன. அத்துடன் இதுதொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.

இதற்கிடையே அகமதாபாத் பொதுநல மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட வெண்டிலேட்டர்கள் முறையாக வேலை செய்யவில்லை என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் பொதுநல மருத்துவமனைகள் தொடர்பாகக் குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த அனைத்து பொதுநல வழக்குகளும் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, இனி இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு கொரோனா விவகாரத்தில் ஏற்கனவே அகமதாபாத் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com