ஆபாச படமெடுத்து மிரட்டுவதாக பெண் மீது பாஜக எம்பி புகார்: பெண்ணும் பதில் புகார்
பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவதாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணும் பதிலுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்பி கே.சி.படேல், பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவதாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் உதவி கேட்டு வந்த வந்த பெண் தனக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் பிடித்ததாகவும். தற்போது அந்த படத்தை பகிரங்கப்படுத்துவதாக கூறி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் கே.சி.படேல் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கே.சி.படேல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அது குறித்து அளித்த புகாரை டெல்லி போலீசார் ஏற்கவில்லை என்றும் அந்தப் பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரிக்க போலீஸாருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.